ன்பு சாயி சொந்தங்களுக்கு, அனேக வணக்கங்கள். நமது "ஓம்' இதழில் வெளியாகிவரும் பாபாவின் அற்புதங்களைப் படித்துவிட்டு, பல அன்பர்களும் தங்கள் பிரார்த்தனைகளை வழித்துணை பாபா கூட்டுப் பிராத்தனை கோபுரத்திற்கு அனுப்பிவருகிறார்கள். அவை பாபாவின் அருளால் நிறைவேறிவருவது கண்கூடான காட்சி.

மேலும், தற்பொழுது சமஸ்கிருதமே அறியாத அடியேனுக்கு, நான் பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனையில் இருக்கின்றபோது, சாயி பக்தர்களுக்காக சமஸ்கிருதத்திலேயே மந்திரங்களைத் தருகிறார் பாபா.

அவற்றை பக்தர்களுக்குச் சொல்லி, அவர்களும் அவற்றை ஓதி நலம்பெற்று வருகிறார்கள். தற்பொழுது அந்த மந்திரங்கள் Saibaba Prayuer' என்கிற யூடியூப் சேனலில் பதிவிட்டும், அடுத்து புத்தகமாக வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த மந்திரங்களில் சாயிபாபா வின் பெயரும், அவரை மட்டுமே பிரத்யேகமாக வழிபாடு செய்யும் படியான வகையிலும் அமைந்தி ருப்பது சிறப்பு. புகழ்பெற்ற சாயி பக்தர் தாங்கணு மகராஜ் எழுதிய "ஸ்தவன மஞ்சரி'யைப் போன்று, இதுவும் சாயி பக்தர்களுக்கு அமையுமென்பதில் ஐயமில்லை.

Advertisment

இந்த புத்தகம் வெளிவர சாயிபக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து, குருவருளுக்கும், திருவருளுக்கும் பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.

சாய்பாபாவின் கருணை!

என் பெயர் விஜயகுமாரி அருணாசலம். மதுரையில் வசிக்கிறேன். "கொரானா' காலம் கொடுமையானதாக இருந்தாலும், அது நமக்கு பல கொடுப்பிணைகளை வழங்கியது. இந்த நேரத்தில் எங்களது 55, 65 வயதுகளில் ஒரு புதிய அனுபவத்தையும், மனித நேயத்தையும் வழங்கியது. நானும் என் கணவரும் தனியே வசித்துவருகிறோம். எனது வீட்டின் எதிர்ப்புறம் தனியார் ரப்பர் தொழிற்சாலை உள்ளது. ஊரடங்கின்போது தொழிற்சாலை மூடப்பட்டது. அச்சமயம் அங்கு பணிபுரியும் அலுவலர் எங்களிடம் வந்து "தினமும் எட்டு பாக்கெட் பால் வழங்கமுடியுமா' என்று கேட்டார். நாங்கள் சரி என்றோம். பிறகு அவர் தயங்கியபடி, "தினமும் 15 நபருக்கு 12.00 மற்றும் இரவு 8.00 மணிக்கு உணவு வழங்கமுடியுமா?' என்று கேட்டார். நாங்களும் 15 நாட்கள்தானே ஊரடங்கு என்று நினைத்து சரியென்று சொல்லிவிட்டோம். எந்த தைரியத்தில் சொன்னோம் என்று தெரியவில்லை.

Advertisment

15 நாள்கள் என்பது 45 நாட்களாக நீண்டது. பணிக்குத் தேவையான கேஸ் சிலிண்டர், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை. எனது மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்த விஷயத்தைச் சொன்னவுடன், "அம்மா, அப்பா, நீங்கள் செய்வது மிகவும் நல்ல பணி. இதில் நாங்கள் உங்களுக்கு உதவிசெய்ய முடியவில்லை' என்று வருத்தப்பட்டார்கள். இந்த நேரத்தில் எங்களது உடல்நிலை மிக நன்றாக இருந்தது. என்றும்போல் எங்கள் தினப்பணிகளைச் செய்துகொண்டு ஆரோக்கியத்துடன் உள்ளோம். இதற்கெல்லாம் காரணம் பாபாவின் கருணைதான்.

sai baba

மகனை மீட்டுத் தந்த பாபா!

என் பெயர் எஸ். கீதா.

இரும்புலியூரில் வசிக்கிறேன். நான் வாரந்தோறும் வியாழக்கிழமை தவறாமல் வண்டலூர் வழித்துணை பாபா ஆலயத்திற்கு வருவதைக் கடமையாகக் கொண்டுள்ளேன்.

எனது இரண்டாவது மகன் இளஞ்செழியன், கடந்த 15 தினங்களுக்குமுன் உடல்நலமின்றி அவதிக்குள்ளானான். மருத்துவர்களிடம் காண்பித்தேன். சிகிச்சை பலனளிக்க வில்லை. மகன் நிலை மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டி, சென்னை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லும்படி கூறினார்கள். எனவே தாமதமின்றி மகனை மேற்படி மருத்துவமனையில் ஒஈம-ல் சேர்த்துவிட்டேன். எனது கவலை, சோகம், துயரம், அழுகை அதிகமானது. பசியில்லை; தூக்கமில்லை. அப்போது சட்டென்று எனக்கு பாபாவின் நினைவு வர, உடனே நம்பிக்கையோடு வண்டலூர் வழித்துணை பாபாவிடம் வந்து அங்கு சிறப்பாக நடைபெறுகின்ற கூட்டுப் பிரார்த்தனையில் எனது விண்ணப்பத்தை வைத்தேன்.

பிரார்த்தனை முடிந்த சமயம், "மகன் பிழைத்துக்கொண்டான்; கண் விழிக்கிறான்; கவலை வேண்டாம்' என மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. அப்போதுதான் எனக் கும் உயிர் வந்ததுபோல் இருந்தது. வண்டலூர் வழித்துணை பாபாவின் அருளால் என் மகன் உயிர்பெற்று மீண்டுவந்தான்.

வண்டலூர் வழித்துணை பாபாவின் ஆலயத்திற்கு வாருங்கள். உங்கள் வலி தீரும். பிரார்த்தனைக்கு வெற்றி, மகிழ்ச்சி கிடைக்கும்.

கூட்டுப் பிரார்த்தனையின் மகிமை!

என் பெயர் சரஸ்வதி லட்சுமி நாராயணன். திருவான்மியூரில் வசிக்கிறேன். நான் காலையில் தினமும் 4.00 மணிக்கு எழுந்து சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்வேன். சென்னையிலுள்ள அனைத்து பாபா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளேன். அப்படி தரிசனம் செய்கின்றபோது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தையும் தரிசனம் செய்தேன். இங்குள்ள நேர்மறை ஆற்றலால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இங்கு தியானத்தில் இருந்தபோது கண் முன்னால் சாய்பாபா தோன்றினார்.

என் மகனுக்கு வேலை கிடைக்கவேண்டி பிரார்த்தனை சீட்டெழுதி, குருஜியிடம் சமர்ப்பித்தேன். அதன் படியே என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. இல்லாத உறவாக பாபா இருக்கிறார். அவரையே அனைத்துமாக நான் பார்க்கிறேன். காலையில் எழுந்து பாபாவை வணங்கும் போது, கிழக்கு திசை நோக்கி, "பந்தம் பாசம் என்னைவிட்டு அகலவேண்டும்' என்றும்; மேற்கு திசை நோக்கி நின்று, "காமம், குரோதம் அகல வேண்டும்' என்றும்; வடக்கு திசை நோக்கி நின்று, "நல்ல எண்ணத்தோடு, தூய மனதோடு வாழவேண்டும்' என்றும் வேண்டிப் பணிகிறேன்.

வியாழன் தரிசனம் விடியில் நிதர்சனம்!

என் பெயர் லட்சுமி வாசுதேவன். சென்னையில் வசிக்கிறேன். நான் தினந் தோறும் சாய்சரிதம் படித்துவிட்டு, "ஸ்தவன மஞ்சரி'யும் படிப்பேன். சாய்பாபா அருளால் தினந்தோறும் ஒரு ஐந்து நிமிடம் அப்பாவை வேண்டிக் கொள்வேன். ஒருமுறை என் கண்முன் அப்பாவின் இடது பாதம் தெரிந்தது.

அதுவரை என்னிடம் சாய் அப்பாவின் உருவச்சிலை வீட்டில் இல்லை. சிறிய புகைப்படம்தான் இருந்தது. ஆனாலும் அப்பாவை நான் பிரார்த்தனை செய்தால் அரைமணி நேரத்திற்குள் எனது பிரார்த்தனை நிறைவேறும். வண்டலூர் பாபா ஆலயத்தில் சாய் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை குருஜியிடத்தில் சொல்லும் முன்பாகவே, அவர் அவர்களின் நோக்கத்தைச் சொல்லி அதற்கான பிரார்த்தனையையும் செய்து, சாய்பாபாவின் அருளால் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இங்கு வேண்டிக்கொண்டு, இதுவரை கிட்டத்தட்ட 600 குழந்தைகள் பிறந்திருப்பது சிறப்பு.

பாபா தரிசனம் பாவ விமோசனம். வியாழன் தரிசனம் விடியல் நிதர்சனம்!

குழந்தை பாக்கியம் தந்த பாபா!

என்னுடைய பெயர் சுந்தரியம்மாள். சென்னை, பீர்க்கன்கரணையில் வசிக்கிறேன். நான் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் சேவை செய்துவருகிறேன். இந்த கூட்டு பிரார்த்தனை கோபுரத்தில் இரண்டு விஷயங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருகின்றன.

ஒன்று எல்லாருடைய பிரார்த்தனைகளுக்குமான கூட்டுப் பிரார்த்தனை.

மற்றொன்று, தாய் வரலட்சுமி அவர்கள் எலுமிச்சைக் கனியை சாய்பாபாவின் பாதங்களில் வைத்துப் பிரார்த்தனை செய்து தரும்போது, பல வருடங்களாக குழந்தை பாக்கியமில்லாத தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இதை நேரில்கண்டு நானும் ஒரு சாட்சியாக உள்ளேன்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில் முதல் பெண் பெயர் எஸ். ஜெயஸ்ரீ. அவளை தட்சிணாமூர்த்தி என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தேன். இந்த கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தின் மகிமையை அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் இருவரும் சாய் வரலட்சுமி அவர்களிடம் எலுமிச்சை வாங்கி உண்டதும், ஒரு மாதத்தில் கரு உருவாகி, என் மகள் இப்பொழுது அழகிய பெண் குழந்தை பெற்றிருக்கிறாள். எல்லாம் பாபாவின் மகிமை!

(முற்றும்)